கால புருச தத்துவம்
வானத்தில் வட்டமிடும் ஒன்பது கிரகங்களையும், பூகோளத்தத்துவத்தில் அண்டத்தில் உள்ள பஞ்சபூத சக்திகளை, பூமியில் வாழும் பிண்டங்கள் ஏற்றுக்கொள்ளும் ஏகாந்தபோக்கை ஞானக்கண்ணல் உற்றுநோக்கி உலகறியச்செய்த சித்தர்கள், பன்னிரெண்டு ராசிகள், இருபத்தேழு நட்சத்திரங்களில் உருண்டோடும் ஒன்பது கிரகங்கள் விளையாடும் விளையாட்டை விதி என்று உரைத்தனர்.
அண்டம் ஒரு அகப்படாத மர்மம் நிரைந்த கற்ப்பனைக்கு எட்டாத காவியம். உயர்ந்த லச்சியம் கொண்ட பேற்றிஞர்கள் அறிவுக்கும் அகப்படாத உண்மைகள் இன்னும் இருக்கத்தான் செய்க்கின்றன, நமது முன்னோர்கள் எவ்விதமான் உபகரணமும் இல்லாமல் வான மண்டலத்தை அமர்ந்த நிலையில் உற்று நோக்கி அவற்றின் செயல்பாடுகளை உள்வாங்கி உயிரின்ங்களுக்கு உண்டாகும் நன்மை தீமைகளை மட்டுமல்லாது பூகோள் வீதியில் ஏற்படும் மாறுதல்களையும் சேதங்க்களையும், விளைவுகளையும் விள்க்கமாக விளக்கிவிட்டுச் சென்ற பாதையை இன்றைய அறிஞர்கள் கையாண்டாலும் அவற்றில் தீர்மானமாக முடியாத பல முடிச்சுகள் இருக்கத்தான் செய்கின்றன.கருத்துகள் வேறாக இருந்தாலும் கொள்கைகள் ஒன்றாகத்தன் இருக்கின்றன.
இதில் அவர்கள் காட்டிய உண்மையை விளக்கமாக உற்றுப்பார்க்கும் போது இராசி மண்டலத்தின் சுழற்ச்சி பாதையானது 360 பாகைகள் கொண்டதாகவும், அதனை பன்னிரெண்டு சமபாகங்களாக பிரிக்கப்பட்டு இருப்பதில் இயல்பான குணமுடையதும் எதார்த்த போக்கு கொண்டதும், எதிர்மறையானதும், எதிலும் வேறுபட்டு கான்பதுமான இராசிமண்டலத்தில் விசுவரேகை கொண்டும் அயண ரேகை கொண்டும் பிரிக்கப்பட்டதுமான் இராசிமண்டலதில், மேஷம்,ரிசபம்,மிதுனம்,கடகம்,சிம்மம்,கன்னி,துலாம்,விருச்சிகம்,தனுசு,மகரம்,கும்பம்,மீனம் என்கின்ற பெயரிட்டு பிரிக்கப்பட்ட பன்னிரெண்டு பாகத்தில் கடகரேகை என்று சொல்லப்படும் அயனத்தை தட்சிண்ம் என்றும், மகர ரேகை என்று சொல்லப்படுகின்ற அயனத்தை உத்திராயணம் என்றும் பெயரிட்டனர்.
இதில் அர்த்தமுள்ள விஷயங்களை கொண்ட் இராசிமண்டலத்தில் பஞ்சபூத சக்திகளின் இயக்கமான நெருப்புமயமானதும், மண்மயமானதும், காற்றுமயமானதும்,நீர்மயமானதுமான, பிரிவுகளை பிரித்து அதில் வேறுபட்ட தன்மைகளையும் உட்படுத்தி,அதிலும் தொடர்ந்து பலனளிப்பதும் நிலையான தன்மைகொண்டதயும் உறுதியற்ற தன்மையையும் கொண்டரசிகளை பிரித்தனர்.
அதில் சாந்தமான், சத்வீகமான, வீரமான, விவேகமான, இயல்பான, பண்பான், பாசமான, கடமையான, ஆதிக்கமான, வெறுமையான, வீனான, விரையமான,உண்மையான, சத்தியமான, வறட்சிகொண்ட,மலட்டுத்தன்மையுள்ள, வேகமான, சீற்றமுள்ள, சினம்கொண்ட, மாசற்ற, மனிததன்மையுள்ள, மொளனமான, மனமாற்றமுள்ள, குரலோசைகொண்ட, குருட்டுத்தனமான்,உழைப்புத்தன்மையுள்ள, மிருகத்தன்மையுள்ள, நாற்கால் இராசிகளாகவும்,இரட்டைப்படையான,இருமடிப்புள்ள,குட்டையானதும்,நீண்டதுமான, உயர்ந்த லட்சியம்கொண்ட,உறுதியான நிலைகொண்ட, இராசிமானங்களில் உயிர் தோற்றம்ட்டும்ல்லாது,நடந்தது,நடப்பது,நடக்கைருப்பதுமான் அனைத்து விஷயங்களையும்,ஆராயவேண்டி பகுத்துபார்க்க வேண்டும்
No comments:
Post a Comment