இராசிமண்டலம்
பரந்து விரிந்துள்ள பிரபஞ்சத்தை பஞ்சபூத சக்திகளின் ஆதிக்கத்தை, விரிந்து பரந்துள்ள வின்வெளியில் சூரியனோடு சுற்றிக்கொண்டும் தானும் சுற்றி, சூரியனையும் சுற்றிக்கொண்டுள்ள எண்ணற்ற கோள்களின் நிலைதனை அறிந்து அதனினும் ஒவ்வொன்றையும் பாங்காக அகழ்ந்தாராய்ந்து பயன்பாட்டினை பாங்காக வெளிக் கொண்ர்ந்த நம் ரிசி பெருமக்களும் அறிஞர் பெருமக்களும் உண்மைகளை உணர்ந்து எடுத்துச்சொல்லி கையாண்ட பிரபஞ்ச வீதியை, சூரியனை சுற்றிவரும், பாதையை 360* பாகைகளாக்கி அதற்குள் நட்சத்திரமண்டலத்தை உள்ளடக்கி, அதில் உருண்டோடும் ஒன்பது கிரகங்களின் ஒவ்வொரு நிலைதனை எடுத்து, சூரியனிலிருந்து குறிப்பிட்ட தூரத்தில் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றிக்கொண்டுள்ள பூமியில்,வாழும் உயிரினங்களுக்கு மட்டுமல்லாது ஓரறிவு கொண்ட புல் பூண்டுகளில் இருந்து, ஆறறிவு கொண்ட மனிதப்பிறவி முதற்கொண்டு எத்தகைய பரிபாலனங்களை வழங்குகின்றது என்பதை மெஞ்ஞானம் கொண்டு பார்த்தாலும், விஞ்ஞானம் கொண்டு பார்த்தலும் இன்றும் வியப்பூட்டும்படியான பிரபஞ்ச் ரகசியத்தை விளக்குவது வியப்பினும் வியப்பானது. அண்டம் ஒரு அகப்படாத மர்மம் நிறைந்த கற்பனைக்கு எட்டாத காவியம். உயர்ந்த லட்சியம் கொண்ட பேரறிஞ்ஞர்களின் அறிவுக்கும் அகப்படாத உண்மைகள் இன்னும் இருக்கத்தன்செய்கின்றது.
No comments:
Post a Comment