பாவ உபநட்சத்திரத்தின் வலிமை
இவ்வுலகில் பிறக்கும் அனைத்து ஜீவன்களும் ஏதோ கர்மவினையை தாங்கித்தான் இப்பூவுலகில் பிறக்கிறது
என்பதை ம்றுக்கமுடியாது.ஆனால் மனிதனாக் பிறந்த அனைவரும் எல்லாபலன்களையும் அடைந்தவர்கள்
என்றும் கொள்ளமுடியாது.ஆனால் பிறக்கும் போது உதயலகனத்தின் ஆரம்பமுனை
உபநட்சத்திராதிபதியை கொண்டு லக்னத்தின் நிறம், மணம், குணம்,புகழ், கொளரவம்,திறமை,பன்பாடு,ஒழுக்கம்,அந்தஸ்து முதலியவற்றை அறியலாம்.
அவ்வாறு திறமையை அறியும்போது அவரது முயற்சியையும்
தெளிவான மனநிலையும், ஊக்கத்தையும் மூன்றாம் பாவ உபநட்சத்திராதிபதி லக்ன பாவத்தோடு நன்கு
ஒத்துழைக்கவேண்டும்.
இல்லையேல் அவரது முயற்சி அனைத்தும் விழழுக்கு இறைத்த
நீராகிவிடும்.இவ்வாறு நாம் ஒவ்வொறு பாவமும் அதாவது 12 பாவ ஆரம்ப முனைகளும்
லக்னபாவத்தோடு ஒத்துழைப்பதும், மறுப்பதும் கானப்படும். அவ்வாறு நன்கு ஒத்துழைக்கின்ற
பாவங்கள் எது? அதில் லக்னத்திற்க்கு நன்மையை எவ்வாறு எப்படி எந்த நேரத்தில் செய்யும்
என்பதனை கணக்கிட்டு அக்காலத்தில்ஜாதகரின் முயற்சிக்கு வழிகாட்டுதலே
ஜோதிடத்திற்க்கு பெருமை சேர்க்கும் பன்ப்பாகும். அதே நேரத்தில் ஒரு தீமையான
பலன்களிலிருந்து ஜாதகரை தடுத்தாட்கொள்ளவும், தீமை எந்த வழிகளில் எவ்வாறு,எப்படி ஜாதகரை
ஆட்கொள்ளும் என்றாய்ந்து எடுத்து சொல்லி அதிலிருந்துகாப்பாறவும் ஜோதிடம் நமக்கு
வழிகாட்டுகிறது. இதனை கே.பி. முறையில் ஆராயும் போதுஜனன காலத்தில் இராசிமண்டலத்தில்
ஏற்படும் 12 பாவநிலைகளை ஆட்கொள்ளும் பாவ உபநட்சத்த்ராதிபதிகள் வலிமை
வாய்ந்தவர்களாகின்றனர்.இந்த பாவா ஆரம்பநிலைகளின் மாற்றத்தால் தான் நான்கு நிமிட வித்தியாசத்தில் பிறக்கும்
இரட்டைகுழ்ந்தைகளின் வித்தியாசத்தில் பிறக்கும் குழ்ந்தைகளின் ஜாதகத்தில் பலன்களும் மாறுவதை நாம்
கானலாம்.
மேலும்
ஒரு ஜாதகத்தில் நன்மை எவ்வாறு யாரிடமிருந்து ஜாதகருக்கு கிடைக்கும் என்பதயையும்
ஆராயும் பொழுது இராசி மண்டலத்தின் தன்மையும் ,குணத்தையும் , கிரகத்தின்
காரகத்துவத்தையும் பிணைக்கின்ற போது கிடைக்கின்ற பலன் தான் ஜாதகத்தின் ந்ன்மை தீமையை நிர்ணயிக்கிறது. அவ்வாறு இராசிமண்டலத்தை நம்
முன்னோர்கள் நெருப்பு ,நிலம், காற்று, நீர் மயமான இராசிகளாகவும் இதனை சர,ஸ்திர, உபய இராசிகளாகவும்,மேலும் பயனுள்ள இராசிகள்,வரண்ட ராசிகள்,மொளனமான இராசிகள்,சீற்றமுள்ள இராசிகள்,மனிதத் தன்மையுள்ள இராசிகள்,
குரலோசை, இருமடிப்புள்ள இரட்டை
தேகமுள்ள இராசிகள், குள்ளமான இராசிகள்,உயரமான இராசிகள் என்று இராசிகளின் தன்மைகளை பலனறியும் நிலைக்கேற்ப பிரித்து
மிக் துள்ளியமான் பலனுறைக்க செவ்வனே வழி வகுத்துள்ளார்கள்.
இந்த
நிலையில் ஒரு ஜாதகரது லக்ன ஆரம்ப முனை உபநட்சத்திராதிபதி நின்ற நட்சத்திரத்தின் அதிபதி
இராசி மண்டலத்தில் அமர்ந்து நிலைகொண்டு, ஜாதகரின் தேகம், குணம், முயற்சி ஆத்ம சக்தி,வீரியம்,தகுதி,கொளரவம்,அந்தஸ்து,போன்றவறையும் இப்புவியில்எதனை
சார்ந்து வாழ்வார்,அல்லது எதெல்லாம் இவரை சார்ந்து நிற்க்கும், என்பதையெல்லாம் அறியலாம். மேலும் பாவ
உபண்ட்சத்திரத்தில் செயல்பாடுகள் இருவிதமாக பிரிக்கப்படுகின்றது.
1) பண்ணிரெண்டு பாவ உபநட்சத்திரமும்,தான் பெற்ற
அதிகாரத்திற்க்கு உட்பட்டுபலன்களை ஜாதகருக்கு வழ்ங்குவது உரிய காலத்தில்
என்றில்லாமல் லக்ன பாவம் தொடர்புகொண்டுள்ள பாவங்களோடு 12 பாவ உபநட்சத்திராதிபதிகள்
கொண்டுள்ள உறவுக்கேற்ப ஜாதகரின் விதியை நிர்ணயிப்பது பாவ உபநட்சத்திரமே.
உதாரண்மாக 4,8,12, ஆம் பாவ உபநட்சத்திராதிபதி ஒருவராகி 6 ல் நின்று 10 ல் நிற்கக்கூடிய
கிரகத்தின் நட்சத்திரத்தில் நின்று இரண்டுக்குடையவருடைய உபநட்சத்திரத்தில் நின்றால்
ஜாதகருக்கு 4,8,12, ஆம் பாவ சம்பந்தமான தொழில் அதாவது ஒன்றை அழித்து உருவாக்கும் தன்மையுடைய உத்யோக அமைப்பு ஏற்படும்.
இஞ்சினியரிங் சம்பந்தமான் அல்லது பொருட்களை உற்ப்பத்தி செய்யக்கூடிய
தொழிற்சலைகளிலோ உத்யோகம் கிடைக்கும். அதேபோன்று 3,9, ஆம் பவஉபநட்சத்திராதிபதி ஒன்றாகி 10 ல்நின்று 6 ல்நிற்க்ககூடிய்
கிரகத்தின் நட்சத்திரத்திலும்,
2 க்குடையவருடைய
உபநட்சத்திரத்திலும் நின்றால் கேன்வாஷிங்,காண்ட்ராக்ட் லமாகவோ,ரெப்ரசண்டேட்டிவ்வாகவோ,உத்யோகம் அமையும்.
அதிலும் பாவ உபநட்சத்திரத்தில் நின்றகிரகத்தின் காரகத்தோடு அவர்கள் நிற்க்கும்
இரசியின் குணாகாரதிற்க்கு ஒப்ப்பலன்களின் அளவு கோள் மாறுபடும். ஏனென்றால் உழைத்து,உழைத்து எந்த பயனும்
இல்லாமல்வாழ்க்கை என்பது உயராமல் வாழும் ஜாதகர்கள் எத்தணையோ உள்ளனர். அதே
நேரத்தில் உழைப்பு குறைவாக இருப்பினும் வசதி வாய்ப்புகள் நிறைய
பெறும் ஜாதகர்களும் உண்டு.
ஆகவே பாவ உபநட்சத்திரத்தின் வலிமை கொண்டு பலன்களின்
ஏற்றம் இரக்கம், பயன்போன்றவற்றை அறியமுடிகிறது.
தசாநாதனும், புத்திநாதனும் தான்பெற்ற அதிகாரத்தை அல்லது குறிகாட்டும் பாவங்களுக்கு பலன்களை செய்யும்
முன்பு தான் நின்ற பாவத்தின் உபநட்சத்திராதிபதியின் அதிகாரத்திற்க்கு உட்பட்டு
பலனளிக்கின்றார்கள்.மேலும் தசாநாதன் தான் குறிகாட்டும் பாவங்களின் ந்ன்மை தீமைகளை
பாவ உபநட்சத்திராதிபதிகளே தீர்மாணிக்கிறார்கள். உதாரன்மாக் தசாநாதன், அல்லது ஒரு கிரகம் 2,6,10 பாவங்களுக்கு
குறிகாட்டுகிறார் என்று கொள்வோமேயானால்அக்கிரகம் நன்மையான பாவங்களுக்கு
குறிகாட்டுகிறது. ஆனால் அக்கிரகம்,12ம் பாவ உபநட்சத்திரத்தின் உபநட்சத்திரமாக இருந்தால்
முற்றிலும் அந்த பாவங்களின் தன்மைக்கேற்றவாரு ஜாதகருக்கு இழ்ப்புகள்
ஏற்ப்பட்டுக்கொண்டே இருக்கும்.மேலும் உதாரணமாக இராகு தசாநாதனாக ஒருஜாதகத்தில் 2,5,6,7,10,11,12 ஆம் பாவங்களூக்கு
குறிகாட்டுகிறார் என்று கொள்வோமானால் 12 ஆம் பாவ உபநட்சத்திரம் கேதுவாகி, கேதுவின் உபநட்சத்திரமாக
இராகு இருப்பாரேயானால் மேற்குறிப்பிட்ட குடும்பம் குழ்ந்தை, மணைவி,உத்யோகம் போன்ற
அனைத்தையும் இழ்க்கிறார்.
ஆக பாவ உபநட்சத்திரமானது ஒரு ஜாதகத்தின் விதியை நிர்ணயிக்கும் போது உலகத்தில் படைக்கப்பட்ட
அனைத்தையும் கிடைக்கச்செய்வதும் அல்லது மறுப்பதும் தகுதியை நிர்ணயிப்பதும் தண்டனையை
பெற்றுத்தருவதும், இன்பதுன்பத்தை இகபர வாழ்வில் ஒரு ஜாதகருக்கு தான் பெற்ற அளவுக்கேற்ப உவந்து அளிப்பது பாவ
உபநட்சத்திரத்தின் தனித்தன்மையாகும். இது ஜோதிட மார்த்தாண்டர் K.S.K.அவர்கள் கண்டெடுத்த ஜோதிடத்தின்
முத்துக்கள் என்பதை
உலகம் அறியும்.
மேலும் பாவ உபநட்சத்திரமே சில நிமிட நேர வித்தியாசத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகளின் மாறுபட்ட
பலன்களை ஜாதகர்களுக்கு அளிக்கிறது. இருவேறு அட்சாமிசத்தில் ஒரே நேரத்தில் பிறந்த
குழந்தைகளின் மாறுபட்ட பலன்களை நிர்ணயிப்பதும் பாவ உபநட்சத்திரமே. நல்லவர்களாக
நாடு போற்றும் மாமனித திறன் கொண்டவர்களாக, எதையும் தாங்கும் மனோதிடம் கொண்டவர்களாக, உலகம் போற்றும் உத்தமர்களாக,
உதவும் கரங்களாக,
உத்தமபுருஷர்களாக
அவதரிக்கும் மனிதர்களை அடையாளம் காட்டுவதும் பாவ உபநட்சத்திரமே.
”வாசியோக ஜோதிட அரசு”
Dr.P.A.பொன்னையா சுவாமிகள்
வணக்கம் சுவாமிகள் சூப்பர்ஸ்டார் நீங்கள் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நல்லபதிவு நன்றி .
ReplyDeleteதன்மானம் உள்ளவர் தானே ஆறுமுக
Deleteஅருமை ஐய்யா...
ReplyDeleteArumaiyana kp arimugathirku nandri ayya.
ReplyDeleteஅய்யா, மிக அருமை. நன்றி.
ReplyDeleteourtechnicians deals with home appliance repair and services are electrical services,plumbing services, two wheeler repair, ATS system repair ervices, house renovation,paintings, washer repair services, bathroom and kitchen remodelling and maintenance services.If you need our service inspect on
ReplyDeletehome appliance
https://www.facebook.com/apm.ourtechnicians/?fref=ts&ref=br_tf
https://www.youtube.com/watch?v=2lFLF4SUTnM
https://www.instagram.com/ourtechnicians/